தமிழ் ஒலிப் புத்தகம் - Tamil Audio Books, Tamil Story Times, tamil novel
வணக்கம்
Tamil Audio Books ( Ponniyin selvan Audio Book/ Tamil Audio Novel, Tamil Story, கதை நேரம்), Tamil Classic Novel -
வணக்கம்
Tamil Audio Books ( Ponniyin selvan Audio Book/ Tamil Audio Novel, Tamil Story, கதை நேரம்), Tamil Classic Novel -
ரமண மஹரிஷி 16 வயதில் மெய்ஞானம் அடைந்தவர். இந்திய அத்வைத தத்துவ மரபின் உச்சம். புராணங்களில் படிக்கக் கிடைத்த மஹரிஷி என்ற வார்த்தைக்கு நம் கண் முன்னே வாழ்ந்த உதாரணம். திருவண்ணாமலையிலிருந்து ஓரடி கூட நகராமல், உலகெங்கிலும் இருந்து பலரையும் தன்னிடம் வரவைத்த பேராற்றல். இறைநிலையை அடைந்தபின், மலைகளுக்குள் ஓடி ஒளியாமல், தன் இறுதிநாள் வரை அனைவருக்கும் தரிசனமளித்து, தன்னுள் ஒளிர்ந்த பேரமைதியை அனைவருக்கும் தந்த பெருங்கருணை. அனைத்து உயிர்களையும் ஒன்றுபோல் பாவித்து, பசுவுக்கும் முக்தியளித்த, தூய அத்வைதப் பேரொளி.
ஸ்ரீ வைஷ்ணவ நெறிக்காக தன்னை அற்பணித்த ஆச்சாரியர்களுள் முக்கியமானவர் ஸ்ரீ ராமானுஜர். சாதாரண மனிதராகப் பிறந்து பெரும் மகானாக வாழ்ந்த அவரது வாழ்க்கை பல போராட்டங்களும் தியாகங்களும் நிறைந்தது. அந்த நிகழ்வுகளையும் அவரது வாழ்க்கைப் பயணத்தில் நிகழ்ந்த பல அறிய சம்பவங்களையும் காட்சிப்படுத்துகிறது இந்த புத்தகம். ஸ்ரீ ராமானுஜர் பாரம்பரிய சமயத் தலைவர் மட்டுமல்ல, ஸ்ரீ வைஷ்ணவத்தில் பெரும் புரட்சியை உருவாக்கியவர். காட்டப்பட்டோரை திருக்குலத்தாராக்கி ஆலயப் பிரவேசம் செய்து, பல மாற்றங்கள் ஏற்பட வழி செய்தவர். இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் ஜே. பார்த்தசாரதி, மிகவும் எளிமையான நடையில், மனதை உருக்கும் வகையில் பக்திப் பரவசத்தோடு ஸ்ரீ ராமானுஜரின் வாழ்க்கை சரிதத்தை எழுதி இருக்கிறார்.
உருவத்திலும் உள்ளடக்கத்திலும் தனித்துவத்தையும் உள்ளார்ந்த தத்துவத்தையும் ஒருங்கே கொண்டு திரண்டிருக்கும் இந்த நாவல், ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் வாழ்ந்த வைதீக வைஷ்ணவர்களின் இடப்பெயர்வுகளையும், அவர்கள் உடன் கொண்டு சென்ற கலாசாரக் கூறுகளையும், அழகுற கண்முன்னே சித்திரமாய் விரிக்கிறது. அக்காலகட்டத்திலே வாழும் வாசக அனுபவம் உறுதி. பஞ்சம் பிழைக்க வேர்களை விட்டுச் சென்று பிழைப்பு தேடும் அவலங்களையும், செய்யும் சமரசங்களையும், பெறும் உதவிகளையும், தலைமுறைகள் கடந்தும் விட்டுச்செல்லும் அதிர்வுகளையும் பிசிறின்றி நெய்துள்ளார் நாவலாசிரியர் ஆமருவி தேவநாதன்.
ஸ்ட்ரெஸ், அதாவது மன அழுத்தம், ஏன் ஒருவர் ஸ்ட்ரெஸ்ஸுடன் ஜாலியாக வாழவேண்டும்?
ராமாயணம் ஒரு காவியம், ஒரு இதிகாசம் என்பதைத் தாண்டி, அது மகத்தான மந்திர சொரூபம். ஸ்ரீமத் ராமாயணத்தின் ஒரு பகுதி சுந்தர காண்டம். இந்தக் காண்டத்தின் அதிதேவதை அனுமன். சுந்தர காண்டம் என்பது அனுமனின் சொரூபமே.
மகாபாரதத்தில் பல கிளைக் கதைகள் இருந்தாலும் நள தமயந்தி கதைக்கு ஒரு தனித்துவம் உண்டு. இது இயல்பான வாழ்க்கையைப் பேசும் கதை. ஒரு காதல் தம்பதியிடையே நடக்கும் பாசப் போராட்டம், அவர்களுக்கு வரும் சோதனைகள், அதனால் ஏற்படும் பிரிவு, துன்பங்கள், அதிலிருந்து மீண்டெழுவதற்கான முயற்சிகள் என ஓர் உன்னத வாழ்க்கையை இந்தக் கதை காட்சிப்படுத்துகிறது.
தன் கட்சியின் பிரதமர் இப்படி மர்மமான முறையில் இறந்திருக்கும்போது அதை இந்திரா காந்தி எப்படிக் கையாண்டார்? இவை அனைத்தையும் அலசுகிறது இந்த நூல்.
Maatru Ulagam - இந்த நூல், மரணம் பற்றிய தேவையற்ற பயத்தை நீக்கி, வாழ்தலின் ஆனந்தத்தை உணரச் செய்கிறது.
சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - Part 1 சோழ இளவரசனான உத்தம சீலியுடன் நடந்த யுத்தத்திற்குப் பின், பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் வீரபாண்டியன். ஒரு போருக்குப் பின் ஒரு மன்னன் தன் நாட்டை மீட்டெடுப்பது அத்தனை சுலபமல்ல. அது எத்தனை கடினமானது என்பதை, கற்பனை கலந்து கல்வெட்டுத் தரவுகளுடன் எழுதி இருக்கிறார் சிரா.
தமிழக வரலாற்றில் மட்டுமின்றி தென்னிந்திய வரலாற்றிலும் ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலம் 'பொற்காலம்' என்றே கருதப்படுகிறது. ராஜராஜ சோழன் ஆட்சியில் அமர்ந்ததும், தமிழர்களின் நூற்றாண்டுப் பெருமிதத்தையும் கலையையும் மீட்டெடுத்தார். என்றென்றும் அழிக்க இயலாத ஒரு பாரம்பரியத்தை உருவாக்கினார்.
மித்ரன் உங்களை வசீகரிப்பான்.
எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்t description.
ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையே உள்ளம் ஒன்றி காதல் அரும்ப, காரணம் ஒன்றும் தேவையில்லை. அந்தக் காதலுக்குத் சவாலாக ஜாதி, மதம், இனம், அந்தஸ்து, ஜாதகம் என்று பல இடைவெளிகளை சமூகம் உருவாக்குகிறது.
கடல் கடந்தும், வான் கடந்தும் பொருள்தேடி அலைகிற இன்றைய காலக்கட்டத்தில் இனக்கட்டுப்பாடுகளும் சாதிக்கட்டுப்பாடுகளும் முழுவதும் தகர்ந்து ப
ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையே உள்ளம் ஒன்றி காதல் அரும்ப, காரணம் ஒன்றும் தேவையில்லை. அந்தக் காதலுக்குத் சவாலாக ஜாதி, மதம், இனம், அந்தஸ்து, ஜாதகம் என்று பல இடைவெளிகளை சமூகம் உருவாக்குகிறது.
கடல் கடந்தும், வான் கடந்தும் பொருள்தேடி அலைகிற இன்றைய காலக்கட்டத்தில் இனக்கட்டுப்பாடுகளும் சாதிக்கட்டுப்பாடுகளும் முழுவதும் தகர்ந்து போகாவிட்டாலும் ஓரளவு தளர்ந்துள்ளன.
ஆனால் மதத்தின் பிடியில் சிக்கிய மனிதனின் மனநிலை எந்த அளவுக்கு குணமடைந்துள்ளது? தனிப்பட்ட மனிதர்களின் தயாள குணமும், விதிவசமாய் நிகழும் சம்பவங்களும் அந்தக் காழ்ப்பை அகற்றி அதைக் கனிவினால் நிறைக்க இயலுமா?
சுவாரசியமான திருப்பங்களுடன் இதற்கு வெளிச்சமிட்டு விடை அளிக்கும் படைப்பு 'வெளிச்சம்' .
Vol 2. Children stories including moral value. குழந்தைகளுக்கான சிறுகதைத் தொகுப்பு
அமரர் கல்கியின் சிறுகதைகள் தொகுப்பு - 4
1 கைதியின் பிரார்த்தனை
2 காரிருளில் ஒரு மின்னல்
3 தந்தையும் மகனும்
4 பவானி, பி.ஏ., பி.எல்.
aurality infotainment plans to play a key role in our lives by enabling us to connect with each other through literature, culture, tradition, and Values, learn from our elders, history, and experiences, further educate, and entertain via our rich Indian 🇮🇳 language(s), communication.
Get advanced teaser copy from new releases! Tamil stories, Tamil Novel
Copyright © 2024 Tamil Audio Books - All Rights Reserved.
Powered by GoDaddy Website Builder